• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ப்ளூ வேல் விளையாட்டிலிருந்து காப்பாற்ற விடைத்தாளில் பள்ளி மாணவன் கோரிக்கை

September 22, 2017 தண்டோரா குழு

மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் காலாண்டு தேர்வின் போது, ப்ளூ வேல் விளையாட்டில் இருந்து தன்னை காப்பாற்ற வேண்டும் என விடைத்தாளில் பள்ளி மாணவன் ஆசிரியருக்கு கோரிக்கை விடுத்துள்ளான்.

மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன், தான் ப்ளூ வேல் விளையாட்டை விளையாடி வருவதாகவும், அந்த விளையாட்டில் தற்கொலை செய்து கொள்ளும் கடைசி கட்டத்தை செய்ய தன்னை வற்புறுத்துகின்றனர் என்றும் இதனால் என்னை காப்பாற்றுங்கள் என்று சமஸ்கிருத தேர்வின் போது விடைத்தாளில் எழுதியுள்ளான்.

இதனை படித்த ஆசிரியர் இதுக்குறித்து பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தந்தார். இதனை அடுத்து பள்ளி அதிகாரிகள், உடனே வருவாய் துறை அதிகாரிக்கு தகவல் தந்தனர். அவர் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த விளையாட்டின் மூலம், பல இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்த விளையாட்டை இணையதளத்தில் இருந்து எடுக்க வேண்டுமென்று இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கோரிக்கை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க