• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போர்சுக்கல்லில் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய வகை மீன் கண்டுபிடிப்பு

November 13, 2017 தண்டோரா குழு

போர்சுகல் நாட்டின் கடலோர பகுதியில், 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய வகை சுறா மீன் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

போர்சுகல் நாட்டின் தெற்கு பகுதியிலுள்ள கடற்பகுதியில்,ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்த போது, சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிய வகை சுறா மீன் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த அரிய வகை சுறா மீன் மெலிதான, பாம்பு போன்ற உடலை கொண்டதாக இருந்ததாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மீனின் வாயில் 25 வரிசைகளில், சுமார் 300 பற்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அந்த மீனுக்கு “Chlamydosel achusAnguineus”என்று பெயரிட்டுள்ளனர்.

சமீபத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஜப்பானில் ஆகிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட
சுறாக்களின் பட்டியலில், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆரிய வகை சுறா மீனை, போர்ச்சுக்கீய கடல் ஆராய்ச்சி பல்கலைகழகம் சேர்த்துள்ளது. இந்த உயிரினம் கடலுக்கடியே சுமார் 39௦ மற்றும் 4,200 அடி வரை இடையேயான ஆழமான பகுதியில் வாழ்வதால், 19ம் நூற்றாண்டிற்கு முன்பு இந்த உயிரினத்தை கண்டுபிடிக்க முடியாததற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

மேலும் படிக்க