• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போப் பிரான்சிஸ் நடித்த ” Beyond the Sun “

May 6, 2017 தண்டோரா குழு

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் Beyond the Sun,என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இது பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Beyond the Sun,என்னும் கிறிஸ்துவ திரைப்படத்தில் போப் பிரான்சிஸ் போப் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். போப் ஆண்டவர் ஒருவர் திரைப்படத்தில் நடித்துயிருப்பது இதுவே முதல் முறையாகும். இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த திரைப்படம் திரையிடப்படவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயேசுவின் செய்திகள் குழந்தைகளை சென்று சேரும் விதத்தில் திரைப்படம் தயாரிக்கப்பட வேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.இதையடுத்து, அவருடைய வேண்டுக்கோளை ஏற்றுக்கொண்டு,அம்பி திரைப்பட நிறுவனம் கிறிஸ்துவ திரைப்படம் ஒன்றை தயாரிக்க கடந்த ஆண்டு திட்டமிட்டது. கிரேசில்லா ரோட்ரிக்ஸ் எழுதி இயக்கிய இப்படம், அப்போஸ்தலர்களின் பன்முக அம்சங்களை பின்பற்றுவதாக அமைந்துள்ளது.

மேலும் இத்திரைப்படத்தால் வரும் லாபம் தென் அமெரிக்காவிலுள்ள அர்ஜென்டினா நாட்டில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பராமரிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தரப்படும் என்று கூறியிருந்தார்.

மேலும் படிக்க