August 5, 2020
தண்டோரா குழு
கோவையில் பெய்து வரும் கனமழையில் போத்தனூர் அருகே செல்லும் நொய்யல் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்தது.
கோவையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்யும் தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு குனியமுத்தூர்,ஆத்துப்பாலம், போத்தனூர் பகுதிகள் வழியாக செல்லும் நொய்யல் ஆற்றில் நீர் ஆர்பரித்து செல்கிறது. இதில் போத்தனூர் ஜம்ஜம்நகர் அருகே உள்ள நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட லேசான உடைப்பால் வெள்ள நீர் குடியிருப்பிற்குள் புகுந்தது.இதனால்
போத்தனூர் சாய்நகரில் உள்ள 13 தெருக்களில் 10 தெருக்களுக்கு தண்ணீர் புகுந்தது.
இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை உடனடியாக சரி செய்வதாக தெரிவித்தனர். அதற்காக மணல் மூட்டைகளை தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.