• Download mobile app
26 Oct 2025, SundayEdition - 3546
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போக்குவரத்து போலீசார் விதிக்கும் அபராதங்களை paytm வழியாக செலுத்தலாம்?

June 9, 2017 தண்டோரா குழு

மத்திய அரசு தற்போது அனைத்து வசதிகளையும் டிஜிட்டல் முறையாக மாற்றி வருகிறது. அவ்வகையில், மொபைல் பேமென்ட் என்னும் “Paytm” மூலம் டிராபிக் போலீசார் விதிக்கும் அபராதத்தை கட்டமுடியும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை,புனே மற்றும் விஜயவாடா ஆகிய குறிப்பிட்ட இடங்களில் இந்த சேவையை தொடங்கியுள்ளது. அந்த நகரங்களிலுள்ள போக்குவரத்து காவல் நிலையங்கள் தங்களுடைய இணையதளத்தில் “Paytm” அதிகாரப்பூர்வ கட்டண முறையாக சேர்த்துள்ளது. விரைவில் மற்ற நகரங்களுக்கு இந்த சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கைபேசியிலுள்ள Paytm ஆப்பில் உள்ள “Traffic Chellan” கிளிக் செய்து, உங்கள் வண்டி எண், இடம் அதில் டைப் செய்யவும். சில விவரங்களை சரிப்பார்த்து விட்டு, டெபிட் அல்லது கிரெடிட் கார்ட், நெட் பேங்கிங் மற்றும் Paytm வாலெட் ஆகிய முறைகளில், உங்கள் விருப்பம் எதுவோ அதை தேர்ந்தெடுத்து, அதன் மூலம் உங்கள் அபராத தொகையை செலுத்தலாம். நீங்கள் பணம் செலுத்தியவுடன், டிஜிட்டல் இன்வாய்ஸ் குறிப்பிட்ட அதிகாரிக்கு அனுப்பப்படும். உங்களுடைய தொகையை பெற்றவுடன், உங்களுடைய ஆவணங்களை சரிபார்த்து விட்டு அனுப்பி தபால் மூலம் அனுப்பி வைப்பார்கள்.

மேலும் படிக்க