• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி விவகாரம்: கண்ணில் கருப்பு துணி கட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் கைது

March 18, 2019

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் கண்ணில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கோவை இடையர் பாளையத்தை சேர்ந்த ரஜினி தேவராஜன் என்பவர் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு மிக விரைவில் தண்டனை பெற்று தர வேண்டும் என்று கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டும் தனது இருசக்கர வாகனத்தில் பேனர் கட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அப்போது, பெண்களுக்கு உரிய பாதுகாப்பில்லை எனவும் பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து பகுதிக்கும் செல்ல இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள சூழலில் அவர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கருப்பு சட்டை அணிந்து பிரச்சார போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

மேலும் படிக்க