• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி வழக்கு: பார் நாகராஜின் பாரை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

March 13, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சியில் உள்ள பார் நாகராஜின் பாரை பொதுமக்கள் அடித்து சூறையாடினர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் வேளையில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்து புகாரின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய சபரி ராஜன், சதீஷ், வசந்த் குமார் மற்றும் தலைமறைவான முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், பொள்ளாச்சி நகராட்சி 34-வது வார்டு அதிமுக அம்மா பேரவை செயலாளராக பதவி வகித்தவர் பார் நாகராஜ். இவர் பொள்ளாச்சி வழக்கில் கைதான முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் நண்பர்.
டாஸ்மாக் பாரை குத்தகைக்கு எடுத்து நடத்தியதால் இவருக்கு பார் நாகராஜ் என்ற பெயர் வந்தது. கடந்த 27-ந்தேதி திருநாவுக்கரசால் பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரரை தாக்கிய வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார். ஆனால் மறுநாளே வெளிவந்துவிட்டார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதையடுத்து நகராஜ் அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் நீக்கப்பட்டார்.

இந்நிலையில், பார் நாகராஜ் மீது எந்த வழக்கும் போடாததால் கோபமடைந்த பொதுமக்கள் சூலேஸ்வரன்பட்டியில் உள்ள பார் நாகராஜின் பாரை பொதுமக்கள் சூறையாடினர்.

இன்று காலை கடைக்குள் புகுந்த பொதுமக்கள் குடித்து் கொண்டிருந்தர்களை வெளியே போகச் சொல்லியபடி கடைக்குள் புகுந்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை எடுத்து உடைத்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். உடனடியாக நாகராஜ் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் ஆவேசத்துடன் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ
இடத்துக்கு சென்று நிலைமையை கட்டுப்படுத்தினர்.

நாகராஜ் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

மேலும் படிக்க