• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி வழக்கு: சிபிஐக்கு மாற்றுவதாக அரசு அறிவித்தபிறகும் சிபிசிஐடி விசாரிப்பது ஏன்? – நீதிபதி கேள்வி

March 29, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்த பிறகும் சிபிசிஐடி விசாரித்து வருவது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் முகநூல் மூலம் கல்லூரி மாணவிகளைகளிடம் நட்பாக பழகி ஆபாச படம் எடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக அரசு அறிவித்தபிறகும் சிபிசிஐடி விசாரிப்பது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும் நடைமுறைகள் நடந்து வருகிறது என தெரிவித்தார்.

இதனிடையே “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்த தமிழக அரசின் பரிந்துரை கடிதம் சிபிஐக்கு வந்து விட்டது. வழக்கை சிபிஐ விசாரிப்பது குறித்து உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. தமிழக அரசின் பரிந்துரை கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுப்பி உள்ளோம்” என பாலியல் வழக்கு விசாரணை தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

மேலும் படிக்க