• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொள்ளாச்சி வழக்கு : கோவை எஸ்.பியை முதன்மை குற்றவாளியாக இணைக்க வேண்டும் வழக்கறிஞர்கள் போராட்டம்

March 18, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை முதன்மை குற்றவாளியாக இணைக்க வேண்டும் என நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கக் கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 70 ஆயிரம் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது என வழக்கறிஞர்கள் கூட்டுக்கமிட்டியான ஜாக் அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நீதிமன்ற பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய கோயமுத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் துணை தலைவர் ரிச்சர்ட்,

பொள்ளாச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் நேரடியாக மேற்பார்வை செய்ய வேண்டும் என வலியுறித்தி இந்த புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கோவை பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று நாளை நீதிமன்ற பணிகளை புறக்கணித்து நீதிமன்ற வளாகத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும். இந்த வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணிநீக்கம் செய்வதோடு முதன்மை குற்றவாளியாக இணைக்க வேண்டும் என்பதை வலியுறித்தியும் இந்த போராட்டம் நடைபெறுவதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

மேலும் படிக்க