• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றம்

February 11, 2020

பொள்ளாச்சி பாலியல் வழக்கை கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றி கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ் வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேரையும் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தினர். இந்த வழக்கு தொடர்பாக இவர்கள் மீது கடந்த மே மாதம் 24 ஆம் தேதி குற்றப்பத்திரிக்கையை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது..

மேலும் இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு உள்ளதால் , வழக்கு அமர்வு நீதிமன்றத்துக்கு வழக்கை கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டது கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்த 5 பேரும் சேலம் மத்திய சிறையிலிருந்து கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீதிமன்ற காவல் 25.2.2020 வரை நீடித்து மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சக்திவேல் உத்தரவு பிறப்பித்தது மட்டுமல்லாமல், பொள்ளாச்சி பாலியல் வழக்கை கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றியும் நீதிபதி சக்திவேல் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் படிக்க