• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் என்னை சிக்க வைப்பதற்காக இந்த மாதிரி நாடகம் ஆடப்படுகிறது – பார் நாகராஜ்

April 29, 2019 தண்டோரா குழு

மோசடி புகாரை திரும்பப்பெற கூறி பெண்ணிற்கு மிரட்டல் விடுவிப்பது போன்ற ஆடியோவில் பேசியது தான் இல்லை என்றும், பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், தன்னை சிக்க வைப்பதற்காக இந்த மாதிரி நாடகம் ஆடப்படுவதாக பார் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்த விஜய் என்பவர் கோகிலா மற்றும் அவரது கணவர் சம்பத் மீது கொடுத்த மோசடி புகாரை திரும்பப்பெற கூறி விஜயின் மனைவி ஜூலியன்ராயர் என்பவரை செல்போனில் பொள்ளாச்சியை சேர்ந்த பார் நாகராஜ் மிரட்டல் விடுப்பது போன்ற ஆடியோ 28 ஆம் தேதி வெளியானது. இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பார் நாகராஜன் புகார் அளித்தார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பார் நாகராஜ்,

இந்த ஆடியோவில் பேசுவது தான் இல்லையென்றும், ஆடியோவில் குறிப்பிடப்படும் விஜய் மற்றும் ஜூலியன்ராயர் மீது தான் கோகிலா பொள்ளாச்சி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், தன்னுடைய நண்பரின் உறவினரான கோகிலா இதுதொடர்பாக தன்னிடம் வந்தபோது காவல் நிலையத்தில் புகார் அளிக்க சொன்னதே தான் என்றும் தெரிவித்தார். மேலும், ஊடகத்தை சேர்ந்த (நக்கீரன் செய்தியாளர் அருள்குமரன்) என்பவர் தன்னிடம் இதுகுறித்து பேசிய அடுத்த நாள் ஆடியோ வெளியாகி உள்ளதால், அவரையும், அந்த பெண்ணையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்துள்ளதாக கூறினார். மேலும், உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் பொள்ளாச்சியில் பெண்கள் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டப்படுவதாக புகார் அளித்த பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே உள்ள பார் நாகராஜ் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

மேலும் படிக்க