• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு: 4 பேருக்கும் உறுதியானது குண்டாஸ்

April 11, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேர் மீது பதியப்பட்ட குண்டர் சட்டத்தை, அறிவுரைக் கழகம் உறுதி செய்துள்ளது.

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், பெண்கள் என 200க்கும் மேற்பட்டோரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக, திருநாவுக்கரசர், சதீஷ்குமார், வசந்தகுமார், சபரிராஜன் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனிடையே, சென்னை அறிவுரைக் கழகத்தில் 4 பேரும் ஆஜரப்படுத்தப்பட்டனர். அவர்களிடம், அறிவுரைக் கழக தலைவர் ராமன் விசாரணை நடத்தினர்.இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேர் மீது பதியப்பட்ட குண்டர் சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதி செய்துள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க