• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் குறித்து பல்வேறு பிரபலங்கள் ட்விட்டரில் கண்டனம்

March 11, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது கருத்துகளை ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில்இளம் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் வேளையில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்து புகாரின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய சபரி ராஜன், சதீஷ், வசந்த் குமார் மற்றும் தலைமறைவான முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இந்த வழக்கில் பெரும் புள்ளிகள் மற்றும் அரசியல் தலையீடும் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கூறிவரும் நிலையில், இது தொடர்பாக நாடு முழுவதும் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. மேலும் இது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

மருத்துவர் ராமதாஸ் :

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சொல்லும் உண்மை என்னவெனில் நம்மைச் சுற்றி மனிதர்கள் என்ற போர்வையில் மிருகங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன என்பது தான். காதல் என்று நாடகமாடும் எவரையும் இளம்பெண்கள் நம்பக்கூடாது. காதல் வலை வீசி வீழ்த்தும் மனித மிருகங்களிடம் எச்சரிக்கை தேவை. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன. இதில் சம்பந்தப்பட்ட அரக்கர்களை தப்பவிடக் கூடாது. இக்கொடூரத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து கடுமையாக தண்டிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கனிமொழி :

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது. இந்த கூட்டத்தையும், இதில் சம்பந்தப்பட்டவர்களையும், அரசும் அமைச்சர்களும் காப்பாற்ற முனையாமல், சிறப்பு நீதிமன்றத்தை நிறுவி, உடனடியாக குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

தமிழிசை :

பொள்ளாச்சியில் நடைபெற்றதாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. பெண்ணினம் கசக்கப்படுவதையும். நசுக்கப்படுவதையும். துளியும்,ஏற்றுக்கொள்ள முடியாதஒன்று,பாதிக்கப்பட்டபெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும,சரியானவிசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்,சிறப்பு புலனாய்வு வேண்டும்.

நடிகர் கதிர் :

மனித ரூபத்தில் இருக்கும் இந்த மிருங்களிடத்தில் கருணையும், ஆதரவும் காட்டக்கூடாது. அந்த பெண்ணின் குரலை கேட்கும் போது இதயம் நொறுங்குகிறது. தண்டனையே இதயமற்ற இந்த மனிதர்களிடத்தில் மாற்றத்தை உண்டாக்கும்.

மெட்ரோ திரைப்பட நாயகன் சிரீஷ் :

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து அறிந்ததில் இருந்து இந்த சமுகத்தில் வாழ்வதற்கு அவமானப்படுகிறேன். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோர், அதில் தொடர்புடைய அரசியல்வாதிகள் மற்றும் ஆதிகாரிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் அல்லது அவர்களை உயிருடன் கொளுத்த வேண்டும்.

மேலும் படிக்க