• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொள்ளாச்சி அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குழந்தையின் உடல் மீட்பு

August 14, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி அடுத்த சர்க்கார் பதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போன குழந்தை 5 நாட்களுக்கு பின்பு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை சர்க்கார்பதி மலைவாழ் மக்கள் வசித்த குடியிருப்புகளை கடந்த 5 நாட்களுக்கு பெய்த கனமழையால் அடித்து செல்லப்பட்டது. உயிருக்கு போராடியவர்களை வனத்துறையினர் மீட்டு முகாம்களிலும், மருத்துவமனைகளிலும் சேர்த்து காப்பாற்றினர். இந்நிலையில் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த குஞ்சப்பன் – அழகம்மாள் ஆகியோரின் 2 வயது குழந்தை சுந்தரி காட்டாறு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது தெரியவந்தது.

குழந்தையின் உடலை வனத்துறையினர் கடந்த 5 நாட்களாக தேடி வந்த நிலையில் ஆழியாறு உட்டுக் கால்வாயில் 4 கிலோ மீட்டருக்கு அப்பால் குழந்தையின் உடல் கிடப்பதாக அருகில் உள்ள தோட்ட உரிமையாளர் பார்த்து தகவல் அளித்தார். அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் குழந்தையின் இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கடந்த 5 நாட்களாக குழந்தையை காணாமல் தவித்த பெற்றோர் குழந்தை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்து கதறி அழுதனர்.

மேலும் படிக்க