• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி

March 13, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி அருகே கெடிமேடு என்ற இடத்தில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி 2 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

கோவை மசக்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பிரகாஷ்(44), லதா(35), சித்ரா(40), சுமதி(46), தாரணி(10) பூஜா(8) ஆகியோர் குடும்பத்துடன் பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு
பொள்ளாச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை பிரகாஷ் ஒட்டி வந்துள்ளார்.

நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் கெடிமேடு பிஏபி பிரதான கால்வாயில் இடது புற கால்வாயின் தடுப்புசுவரின் மீது கார் மோதி பிஏபி கால்வாயில் விழுந்து கால்வாயில் இருந்த தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு கால்வாயின் வலதுபுறத்தில் கார் குப்புற கவிழ்ந்தது. இதில், 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையடுத்து, உடனடியாக பொள்ளாச்சி தீயணைப்பு படையினர் வால்பாறை துணை கண்காணிப்பாளர் கோமங்கலம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கால்வாயில் இருந்து கிரேன் மூலம். காரை மீட்டு உடலை பிரதேபரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க