• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சியில் சொகுசு விடுதியில் மது போதையில் அட்டகாசம் – 150 மாணவர்கள் கைது

May 4, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி அருகே சேத்துமடையில் விவசாய தோட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த சொகுசு விடுதியில் கல்லூரி மாணவர்கள் மது போதையில் அட்டகாசம் கேரளாவைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்களை ஆனைமலை போலீசார் செய்தனர்.

பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை அண்ணாநகர் பகுதியில் உள்ள கணேஷ் என்பவரது தோட்டத்தில் அக்ரி நெஸ்ட் என்ற பெயரில் அனுமதி இல்லாமல் சொகுசு விடுதி செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு 150″க்கும் மேற்பட்ட கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் மது, மற்றும் கஞ்சா, மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்கள் உபயோகித்து இரவு முழுவதும் ரகளையில் ஈடுபட்டதாக போலீசாருக்கு அக்கம் பக்கம் உள்ள விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.

இப்புகாரின் அடிபப்டையில் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் சாதாரண உடையில் நடத்திய அதிரடி ஆய்வில் அனுமதி இல்லாத அக்ரிநெஸ்ட் ரெசார்டில் 150க்கும் மேற்பட்டவர்கள் போதை வஸ்துக்களை பயன்படுத்தி அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் தோட்டத்து உரிமையாளர் கணேஷ் உட்பட மேலும் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் கோவையில் உள்ள வெவ்வேறு கல்லூரியில் படிக்கும் வசதியான மாணவர்கள் இவர்களது நண்பருக்கு பிறந்த நாள் என்பதால் அந்த பிறந்தநாள் விழாவை கொண்டாட இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு அனைவரும் ஒருசேர இங்கு அழைத்து இரவு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் இவர்களது சொகுசு கார்கள் மற்றும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்ந்து சொகுசு விடுதி உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

விவசாயத் தோட்டத்தில் இதுபோல அனுமதியின்றி சொகுசு விடுதிகளில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் சம்பவங்களுக்கு அனுமதி அளித்தது அப்பகுதி பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க