• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கழுத்து அறுத்து கொலை

April 6, 2019

பொள்ளாச்சி அருகே தாராபுரம் சாலையில் பூசாரிபட்டி என்ற இடத்தில் கல்லூரி மாணவி பிரகதி கழுத்தை அறுத்து கொலை செய்து சாலையோரம் வீசி சென்ற கொடூரம் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் கோமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நரசிம்மநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி இவரது மகள் பிரகதி இவர் கோவை ராமகிருஷ்ணா கல்லூரியில் BSC கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த நாட்டு துறை என்பவரும் பிரகதியும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.இவர்கள் இருவருக்கும் பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவு செய்து இரண்டு மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் வைகாசி மாதம் திருமணம் நடைபெற உள்ளதால் அழைப்பிதழ்களிலும் அச்சடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கல்லூரி விடுதியில் இருந்து ஊருக்கு புறப்பட்ட மாணவி நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை பெற்றோர்கள் மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது மாணவியின் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இரவு நேரம் ஆகியும் மாணவி வீடு திரும்பாததால் பதட்டமடைந்த பெற்றோர்கள் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போனதாக மாணவியை தேடி வந்த நிலையில் இன்று மாலை பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் உள்ள பூசாரிபட்டி அருகே சாலையோரம் உள்ள முட்புதரில் ஆடைகள் கலைந்த நிலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
அவ்வழியாக வந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்த கோமங்கலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மாணவியை கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு வீசி விட்டுச் சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க