• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சியில் உரிய ஆவணம் இல்லாதால் அனுஷ்கா கேரவன் பறிமுதல்

May 31, 2017 தண்டோரா குழு

பொள்ளாச்சியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நடிகை அனுஷ்கா பயன்படுத்தி வந்த கேரவனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் படப்பிடிப்புகள் அவ்வப்போது நடைபெற்று வருவது வழக்கம். இங்கு பல முன்னணி நடிகர், நடிகைகளும் வந்து செல்வர்.

இந்நிலையில், நடிகை அனுஷ்கா பங்குபெறும் தெலுங்கு படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்பு பொள்ளாச்சி அருகே உள்ள காளியாபுரத்தில் நடைபெற்றது. அனுஷ்கா பயன்படுத்தி வந்த கேரவன் படப்பிடிப்பு முடிந்து பொள்ளாச்சி நோக்கி வந்தது. அப்போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்ட பொள்ளாச்சி போக்குவரத்து அலுவலர்கள் கேரவன் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து அனுஷ்கா பயன்படுத்தி வந்த கேரவனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த கேரவனின் உரிமையாளர் இளங்கோவனிடம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.கேரவன் பறிமுதல் செய்யப்பட்டபோது கேரவனில் அனுஷ்கா இல்லை என்பது குறிபிடத்தக்கது.

மேலும் படிக்க