• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொம்மை புலியை பிடிக்க 45 நிமிடங்கள் திட்டமிட்ட “ஸ்காட்லாந்து போலீஸ்”

February 9, 2018 தண்டோரா குழு

உலகின் நம்பர் ஒன் காவல்துறையான ஸ்காட்லாந்து 45 நிமிடங்கள் ஒரு பொம்மை புலியை பிடிக்க திட்டமிட்டனர்.

ஸ்காட்லாந்தின் அபர்டன்சயர் மாகாணத்தில் பீட்டர்ஹெட் என்கிற பகுதியில் மாட்டுப் பண்ணை நடத்தி வருபவர் 24 வயது புரூஸ் க்ரப். தனது பண்ணையில் இருக்கும் பல பசுக்கள் கற்பமாக இருப்பதால் அவற்றின் நடவடிக்கைகளைக் கவனிக்க கடந்த 6 தேதி இரவு பண்ணைக்கு வந்தவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. காரணம் பண்ணைக்குப் பக்கத்தில் பெரிய புலி ஒன்று படுத்திருந்தது. புலியைப் பார்த்த புரூஸ் பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் புலி பண்ணைக்குள் புகுந்துவிடுமோ என்கிற பயத்தில் ஸ்காட்லாந்தின் நார்த் ஈஸ்ட் காவல்துறைக்கு போன் செய்துசெய்துள்ளார்.

ஊருக்குள் புலி வந்துவிட்டது என்ற செய்தியை கேட்ட காவல்துறை துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டுஆறு கார்களில்சம்பவ இடத்திற்கு விரைந்தது.வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. சிறிது நேரத்தில் பீட்டர் ஹெட் பரபரப்பாகிறது. பின்னர், சம்பவ இடத்தைத் துப்பாக்கி முனையில் சுற்றி வளைக்கிறார்கள். அங்கு புலி படுத்திருப்பது உறுதிசெய்யப்படுகிறது. ஒருபுறம் புரூஸ் க்ரப்பிடம் விசாரணை நடக்கிறது. மறுபுறம் பக்கத்தில் இருக்கிற தேசியப் பூங்காவிலிருந்து ஏதேனும் விலங்கு தப்பித்துச் சென்றிருக்கிறதா என விசாரிக்கிறார்கள்.

சிலர் துப்பாக்கியை ரெடியாக வைத்து புலியின் நடவடிக்கையைக் கவனித்துக்கொண்டிருக்கின்றன. புலியை எப்படி பிடிப்பது என்று சுமார் 45 நிமிடங்கள் புலியின் அசைவுக்காகக் காத்திருக்கிறார்கள். எனினும், புலியிடமிருந்து எந்த அசைவும் இல்லாமல் இருக்கிறது. இதனால், புலியின் நடவடிக்கையில் சந்தேகமான காவல்துறை பதற்றத்தோடுபுலியை நெருங்க ஆரம்பிக்கிறார்கள்.அங்கு போனவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அங்கே படுத்திருந்தது புலி அல்ல, பொம்மைப் புலி. இதனால் ஒட்டுமொத்த குழுவும் கடுப்பாகி கொலைவெறியோடு புலி என்று போன் செய்த புரூஸ் க்ரப் பக்கம் திரும்புகிறார்கள்.

அவர் போதையில் இருக்கிறாரா என்று என சோதனை செய்கிறார்கள். ஆனால் அவர் “என் பண்ணையில் 200 பசுக்கள் கர்ப்பமாக இருக்கின்றன. அவை எப்போது வேண்டுமானாலும் குட்டி போடலாம், ஒவ்வொரு நொடியும் காத்திருக்கிறேன், இப்படியான சூழ்நிலையில் எப்படிக் குடிக்க முடியும் எனச்சொல்கிறார்.அப்படி என்றால் யார் பொம்மைப் புலியை இங்கே கொண்டு வந்து வைத்தது என்கிற கோணத்தில் விசாரித்தார்கள். ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில், அடுத்தநாள் நார்த் ஈஸ்ட் காவல்துறையின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக், டிவிட்டர் பக்கத்தில், “சம்பவம் நடந்தது உண்மைதான். நல்ல நோக்கத்திற்காகத்தான் அந்தத் தகவல் சொல்லப்பட்டது. கடினமான சூழ்நிலைகளில் மக்களைப் பாதுகாப்பதே எங்களின் பணி, இந்தமாதிரியான சூழ்நிலையையும் நாங்கள் கருத்தில்கொண்டு துரிதமாகச் செயல்படுவோம்” எனப் பதிவிடுகிறார்கள்.

மேலும் படிக்க