• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொன்னாருக்கு வயசு 16 மு.க.ஸ்டாலின் கிண்டல்!

June 5, 2017

கருணாநிதியின் வைரவிழா கொண்டாட்டம் குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்துகள் குறித்த கேள்விக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பதிலளித்தார்.

திமுக தலைவர் கருணாநிதியின் 94 வது ஜூன் 3ம் தேதி பிரம்மாண்டமாக சென்னையில் நடந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். அவ்விழா குறித்து மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் வைரவிழா வயதானவர்களுக்கான விழா கூறினார்.

இந்நிலையில், இது குறித்து பதிலளித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின்,

வைரவிழா வயதானவர்களுக்கான விழா என்று கூறியது பொன்னாரின் அரசியல் நாகரிகத்தை எடுத்துக் காட்டுகிறது. வைரவிழா வயதானவர்களுக்கான விழா என்று சொன்ன பொன்.ராதாகிருஷ்ணனுக்கு 16 வயது என்றும் கிண்டல் செய்தார்.

மேலும், கருணாநிதிக்காக கொண்டாடப்பட்ட வைரவிழாவை வயதானோவர்களுக்கான விழா என்று சொல்லி பொன்.ராதாகிருஷ்ணன் மூத்த குடிமக்களை கொச்சைப் படுத்தியுள்ளதாகவும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

மேலும் படிக்க