• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொதுமக்கள் மழைக்காலத்தில் உணவு சம்பந்தமாக கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

November 8, 2017 தண்டோரா குழு

பொதுமக்கள் மழைக்காலத்தில் உணவு சம்பந்தமாக கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

• குடிநீர் அல்லது குளோரினேற்றம் செய்யப்பட்ட மற்றும் காய்ச்சிய குடிநீரை பயன்படுத்த வேண்டும்.

• ISI தர முத்திரை மற்றும் உணவுப் பாதுகாப்பு உரிமம் உள்ள பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்த வேண்டும்.

• உடனுக்குடன் தயாரிக்கப்பட்ட சூடான உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும்

• தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை பாதுகாபான முறையில் மூடி பயன்படுத்த வேண்டும்.

• சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறி வகைகளை சமைக்கும் முன்பாக உப்பு நீரில் சுத்தமாக
கழுவி பயன்படுத்த வேண்டும்.

• கார்போஹைட்ரேட் நிறைந்த மற்றும் எளிதில் ஜீரணம் ஆகக் கூடிய உணவுப் பொருட்களை அதிகம்
உட்கொள்ள வேண்டும்.

• உலர் திராட்சை, வறுத்த முந்திரி, கடலை வகைகள், பிஸ்கட்டுகள், பால் பவுடர்கள், ரஸ்க்
போதுமான அளவு உட்கொள்ள வேண்டும்.

• சமைத்த உணவுப் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்துவதைத் தவிர்க்க
வேண்டும்.

• உணவுப் பொருட்களை தயாரிக்கும் போதும் சாப்பிடுவதற்கு முன்பும் கைகளை சோப்பு போட்டு
சுத்தமாக கழுவ வேண்டும்.

• சாலையோரம் விற்கப்படும் சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடக் கூடாது.

• எளிதில் கிருமி தொற்று ஏற்படக்கூடிய அசைவ உணவுப் பொருட்களை சுத்தமாக கழுவிய பின்பு
உயர் கொதிநிலை அடைந்த பின்பே உணவாக பயன்படுத்த வேண்டும்.

• உணவு உபாதைகள், வயிற்றுப் போக்கு மற்றும் வாந்திபேதி ஏற்பட்டால் ORS மற்றும் கஞ்சி
வகைகளை நீரிழப்பு ஏற்படாமல் இருக்க உட்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க