• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொதுமக்கள் பார்வைக்காக கோவை போலீஸ் அருங்காட்சியகத்தில் புதிதாக போர் பயிற்சி விமானம்

December 12, 2019 தண்டோரா குழு

கோவை போலீஸ் அருங்காட்சியகத்தில் புதிதாக போர் பயிற்சி விமானம் பொருத்தப்பட்டுள்ளது.

கோவை ரயில் நிலையம் எதிரில் மாநகர போலீஸ் சார்பில் அருங்காட்சியகம் உள்ளது. இந்தியாவின் இங்கு காவல்துறை சம்மந்தப்பட்ட அனைத்து பொருட்கள், ஆயுதங்கள், கருவிகள், விடுதலை புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், சந்தன கடத்தல் வீரப்பன், மலையூர் மம்பட்டியான் பயன்படுத்திய துப்பாக்கிகள், விடுதலை புலிகளின் சிறிய அளவிலான படகு,கடற்கரை போலீசார் ரோந்து படகு, கார்கில் போரில் இந்திய ராணுவம் பயன்படுத்திய பீரங்கி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

நாள்தோறும் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இலவசமாக பார்க்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தாம்பரம் விமானப்படை தளத்திலிருந்து இந்திய விமானப்படை பயன்படுத்திய, சிறிய ரக போர் பயிற்சி விமானம் போலீஸ் அருங்காட்சியகத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.

இவ்விமானம் இருவர் அமர்ந்து பயணிக்க கூடிய விமானம். இதன் எடை 1,034 கிலோ இந்துஸ்தான் பிஸ்டன் டிரைனர் – 32 எனும் இவ்விமானம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும். நான்கரை மணி நேரம் தொடர்ந்து பறக்கக்கூடிய இவ்விமானம் ஐதராபாத், சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பயிற்சி தங்களிலும் பயன்படுத்தப்பட்டது. 252லி கொள்ளளவு கொண்ட எரிபொருள் கொள்கலன் உள்ளது.

மேலும் படிக்க