• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொதுமக்கள் கபசுர குடிநீர், மல்டி விட்டமின் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

April 23, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சியில் கொரோனா தொற்று பரவுதலை தடுப்பதற்காக பல்வேறு தொடர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக வடக்கு மண்டலத்தில் ஸ்ரீ சக்தி காலனியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மாநகராட்சி கமிஷனர் அப்பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களிடம் தினமும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற வேண்டும் என தெரிவித்தார்.

பின்னர் அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்திட வேண்டும்.கொரோனா பாதித்த வீடுகளிலுள்ள அனைவரும் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்திட வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து,சமூக இடைவெளி கடைபிடித்து,அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். கபசுர குடிநீர் மற்றும் மல்டி விட்டமின் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். அனைவரும் கொரோனா நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின் போது நகர்நல அலுவலர் ராஜா, வடக்கு மண்டல உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ், செவிலியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க