January 9, 2019
தண்டோரா குழு
பொங்கல் பரிசை 14-ந்தேதிக்குள் வாங்காவிட்டால் கிடைக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதையடுத்து பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5ம் தேதி தொடங்கி வைத்தார். இதன் முலம் ரூ.258 கோடி ரூபாயில் 2.02 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பரிசுத்தொகுப்பு வழங்கப்படவுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்கூட்டியே ஊருக்கு செல்வதால் 6 நாள் விடுமுறை முடிந்து வந்து பொங்கல் பொருட்களை வாங்கி கொள்ளலாமா? என்கிற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பை 7-ந்தேதியில் இருந்து 12-ந்தேதிக்குள் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 13, 14-ஆம் தேதிகளில் விடுபட்டவர்களுக்கு வழங்கப்படும் என்று ரேஷன் கடைகளில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. எனவே எக்காரணம் கொண்டும் 14-ந்தேதிக்கு பிறகு பொங்கல் பரிசு பொருட்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை.எனவே குறிப்பிட்ட தேதிகளில் அந்தெந்த பகுதி மக்கள் சென்று வாங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.