• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொங்கலுக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் ரூ.1000 வழங்கும் திட்டம் நாளை தொடக்கம்

January 4, 2019 தண்டோரா குழு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வா் பழனிசாமி நாளை தொடங்கி வைப்பார் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பொங்கல் பொருட்கள் தொகுப்பு பச்சை நிற ரே‌சன் கார்டு வைத்துள்ள குடும்பங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. சர்க்கரை பெறக்கூடிய குடும்ப அட்டை வைத்து இருப்பவர்களுக்கு இதுவரை பொங்கல் பரிசு வழங்கப்படவில்லை. இதனால் நடுத்தர மற்றும் வசதி படைத்த குடும்பத்தினர் அதிருப்தி அடைந்தனர்.
இதற்கிடையில் இந்த ஆண்டு அனைத்து குடும்ப அட்டை தாரா்களுக்கும் பொங்கல் பொருட்கள் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 கோடியே ஒரு லட்சம் குடும்பத்தினர் பயன் அடைகிறார்கள்.

குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் தொகுப்பில் ஒரு கிலோ பச்சிரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் இந்த பொருட்களுடன் பை ஒன்றும் வழங்கப்படும். பொங்கல் பொருட்கள் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கப்பணம் அனைத்து நியாய விலைக் கடைகள் மூலம் குடும்பதாரர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு வழங்கப்படும். குடும்ப அட்டைத்தாரர்களோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ நேரில் சென்று பெற்று கொள்ள வேண்டும்.

பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வா் பழனிசாமி நாளை தொடங்கி வைக்கவுள்ளார் ஞாயிற்றுக் கிழமை முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. எந்தெந்த கார்டுகளுக்கு எந்த நாட்களில் பெற்றுக் கொள்வது என்பது குறித்து நியாயவிலைக் கடைகளில் அறிவிப்பு வெளியிடப்படும். தினமும் 300 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் தமிழக அரசுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் கூடுதல் செலவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க