• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.773 கோடி அபராதம்

May 19, 2017 தண்டோரா குழு

உலகின் பிரபல சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் மீது ஐரோப்பிய ஒன்றியம் 11௦ மில்லியன் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

கடந்த 2௦14ம் ஆண்டு, தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் ஆப்பை பேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அப்போது தவறான தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதாக பேஸ்புக் நிறுவனம் மீது புகார் எழுந்தது.

இந்த புகார் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் நேற்று(மே 18) விசாரித்தது.இந்த விசாரணையின் முடிவில் பேஸ்புக் நிறுவனத்துக்கு 11௦ மில்லியன், இந்திய மதிப்பின் படி, 79௦ ரூபாய் அபராதம் விதித்தது.

“நிறுவனம் மற்றொரு நிறுவனத்தை வாங்கும்போது, அந்த நிறுவனம் அது குறித்து விவரமான, முக்கியமான தகவல்களை தெரிவித்திருக்க வேண்டும்” என்று ஐரோப்பிய ஒன்றிய தெரிவித்தது.

இது குறித்து பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,

“ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தந்துள்ளோம். இருப்பினும், கொடுக்கப்பட்ட தகவல்களில் சிறு தவறுகள் ஏற்பட்டது உண்மை தான். வேண்டுமென்றே அந்த தவறை நாங்கள் செய்யவில்லை. தெரியாமல் நடந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் அளித்த தீர்ப்பு குறித்து மேல் முறையீடு செய்ய பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க