• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேரூர் தற்காலிக தரைபாலத்தை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை

October 30, 2019 தண்டோரா குழு

கோவை பேருர் நொய்யலாற்றில் அதிக வெள்ளம் காரணமாக தற்காலிக தரைபாலத்தை மக்கள் பயன் படுத்தமுடியாத நிலையேற்பட்டுள்ளது.

கோவையை அடுத்த பேரூர் பட்டீஸ்வரர் கோவிலருகே உள்ளது பேரூர் பாலம். பேரூரையும், வீரகேரளம் மற்றும் வேடப்பட்டி போன்ற பகுதிகளை இணைக்கும் இந்த பாலத்தினை பொதுமக்கள் போக்குவதற்காக பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், கோவையில் கடந்த தென்மேற்கு பருவமழை காலங்களில் நொய்யாலாற்றில் அதிக வெள்ளபெருக்கு காரணமாக பாலத்தின் மேல் அதிகளவு வெள்ள நீர் சென்றதால் கடந்த பழைய பாலம் இடிக்கபட்டு புதியபாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிக தரைபாலம் அமைக்கபட்டிருந்தது. கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து நொய்யலாற்றில் வெள்ள பெருக்கு காரணமாக தரைபாலம் அடித்து செல்லபட்டது.

இதனால் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் நொய்யலில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் தரைபாலத்தின் மேல் வெள்ள நீர் செல்வதால் பொதுமக்கள் அப்பாலத்தை பயன்படுத்த முடியாத நிலையேற்பட்டுள்ளது. இதனையடுத்து அரசும் மாவட்ட நிர்வாகமும் போர்கால அடிப்படையில் உடனடியாக பாலம் கட்ட வேண்டும் அதுவரை மாற்று பாதை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க