• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு, வேறு வேலை மற்றும் தேவையான உதவிகளை அளிப்பதாக உறுதியளித்த கனிமொழி எம்.பி

June 23, 2023 தண்டோரா குழு

கோவையைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.கோவையில் முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றதால் பிரபலமாகியுள்ளார்.

இவரை அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பேருந்திற்கே வந்து சந்தித்து வாழ்த்தி வருகின்றனர். கடந்த வாரம் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் சந்தித்த நிலையில் இன்று (23/06/2023) காலை திமுக எம்பி கனிமொழி பேருந்தில் பயணம் செய்து ஓட்டுநர் ஷர்மிளாவை வாழ்த்தினார். இத்தகைய சூழலில் ஓட்டுநர் ஷர்மிளா பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த தகவல் அறிந்த கனிமொழி எம்.பி அவர்கள் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வேறு வேலை மற்றும் தேவையான உதவிகளை அளிப்பதாக உறுதியளித்தார்.

மேலும் படிக்க