October 28, 2017
தண்டோரா குழு
இந்திய குடியரசு தலைவர் அழைப்பின் பெயரில்,பெல்ஜியம் நாட்டின் அரச தம்பதியினர், நவம்பர் மாதத்தில் இந்தியாவுக்கு வருகின்றனர்
இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் அழைப்பின் பெயரில், பெல்ஜிய நாட்டின் அரசர் கிங் பிலிப் மற்றும் அவருடைய மனைவி ராணி மத்திலே ஆகியோர் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை இந்தியாவுக்கு வருகை தர உள்ளனர்.
பெல்ஜிய நாட்டின் அரசர் பிலிப் இந்தியாவுக்கு வரும்போது, அவருடன் பெல்ஜிய அரசாங்கத்தின் ஆறு அமைச்சர்கள்,அந்த நாட்டிலுள்ள 86 நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், மற்றும் கல்வி நிறுவனங்களை சேர்ந்த 13 தலைவர்கள் ஆகியோர் கொண்ட ஒரு குழு வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் கிங் பிலிப்பை சந்திப்பார் என்று வெளி விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று ரீதியாக வலுவான உறவுகளை, இந்த பயணம் மேலும் பலப்படுத்தும்” என்று வெளிவிவகார அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.