July 29, 2020
தண்டோரா குழு
கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசியவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்திரவிடப்பட்டுள்ளது.
கோவை சுந்தராபுரத்தில் தந்தை பெரியார் சிலை மீது மர்ம நபர் ஒருவர் காவி சாயம் பூசி சென்றார்.இது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளியை போலீசார் தேடி வந்த நிலையில் பாரத் சேனா அமைப்பின் நிர்வாகி அருண்கிருஷ்ணன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இன்று அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாநகர ஆணையர் சுமித் சரண் உத்திரவிட்டார்.இதற்கான உத்தரவு நகலை நேற்று மாலை கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் மாநகர காவல் துறை வழங்கியுள்ளது.