• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெரியார் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

December 24, 2021 தண்டோரா குழு

பகுத்தறிவுப் பகலவன், வைக்கம் வீரர் தந்தை பெரியாரின் 48-வது நினைவு தினத்தையொட்டி சென்னை அண்ணா சாலை சிம்சன் சிக்னல் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார்.

சென்னை சிம்சன் பகுதியிலுள்ள பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்ட பெரியாரின் திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சேகர் பாபு சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிகேஎஸ் இளங்கோவன், ஆர் எஸ் பாரதி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் தந்தை பெரியார் பிறந்த தினமாகிய செப்டம்பர் 17-ஐ அரசின் சார்பில் சமூக நீதி நாளாக கொண்டாட வேண்டும் என உத்தரவு பிறப்பித்து நடைமுறைப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க