July 17, 2020
தண்டோரா குழு
கோவை சுத்திராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது இன்று அதிகாலை மர்ம நபர்கள் காவி சாயத்தை வீசி சென்றனர்.இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில்,இச்சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலிசார் கலகம் விளைவித்தல், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் பெரியார் சிலை மீது காவி் சாயம் வீசப்பட்ட விவகாரம்தொடர்பாக பாரத்சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் என்பவர் போத்தனூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.