• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெயரை போட்டு போஸ்டர் அடிக்க கூட தைரியமில்லாதவர் வேலுமணி – உதயநிதி ஸ்டாலின்

October 27, 2020 தண்டோரா குழு

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக வின் அராஜக ஆட்சியை கண்டித்து திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பபட்டன.

கூட்டத்தினர் மத்தியில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,

இந்த போராட்டம் வெறும் போஸ்டர் ஒட்டியதற்கான போராட்டம் மட்டும் கிடையாது. கோவையில் வேலுமணி அடிக்காத கொள்ளை கிடையாது,அந்த அளவிற்கு அனைத்திலும் கொள்ளையடித்து இருக்கின்றார்.தேர்தலில் மக்கள் அவருக்கு துரத்தி துரத்தி சாவு மணி அடிக்க போகின்றனர்.பெயரை போட்டு போஸ்டர் அடிக்க கூட தைரியமில்லாதவர் வேலுமணி என கூறிய அவர்,இதை விட அசிங்கமாக , சிறப்பாக எங்களுக்கும் போஸ்டர் அடிக்க தெரியும் என தெரிவித்தார்.

அடுத்த முறை போஸ்டர் ஒட்டினால் கிழிக்க மாட்டோம் எனவும், அதன் மீதே வேறு போஸ்டர் ஒட்டுவோம் எனவும் தெரிவித்தார்.
குனியமுத்தூர் காவல் நிலையத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டபோது அதற்கு அனுமதி மறுத்து , தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு காவல் அனுமதி கொடுத்தனர்.ஆனால் காலையில் அனுமதி மறுத்துள்ளனர். கைதுக்கு தயாராக தான் மேடைக்கு வந்தேன்.திமுக தலைவரும் இங்கே போராட்டம் நடத்த வருவதாக சொன்னவுடன், போஸ்டரை கிழித்தற்காக கைது செய்யப்பட்ட திமுகவினர் காவல் துறையினர் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். எடப்பாடியின் நிழல் முதல்வராக எஸ்.பி.வேலுமணி இருக்கின்றார்.தமிழகத்தில் அடிமை ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கின்றது.

கொரொனாவை வென்றெடுத்த நாயகனே என்று கோவையில் எஸ்.பி.வேலுமணி நோட்டீஸ் ஓட்டியதற்கு பின்னரே, கோவையில் கொரொனா நோய் தொற்று அதிகரித்துள்ளது. இது கொரோனாவை விட மோசமாக ஆட்சி எனவும் கடுமையாக விமர்சத்தார். அமைச்சர் வேலுமணி ஊழல் மணி என தெரிவித்த அவர், பிளிச்சிங் பவுடர் முதல் மாஸ்க் வரை அனைத்திலும் ஊழல் நடைபெற்றுள்ளது எனவும் கோவையில் கே.சி.பி, ஆலயம் அறக்கட்டளை என 7 நிறுவனங்கள் வைத்து அவற்றில் மாற்றி மாற்றி டெண்டர் எடுத்து கொள்ளையடித்து இருக்கின்றனர்.1300 மதிப்பு பல்பை 6000 ரூபாய்க்கு வாங்கி இருக்கின்றார்கள்.ஊழல் செய்தற்கான அனைத்து ஆதாரங்களும் ஸ்டாலினிடம் இருக்கின்றது. ஆட்சி மாறியவுடன் ஊழல் செய்தவர்கள் அனைவரும் உள்ளே போக போகின்றனர்.

நீட் தேர்வை இங்கே அனுமதித்தது எடப்பாடி அரசு எனவும் , வெறும் 8 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் மருத்துவராக முடியும் நிலை இருப்பதாகவும் கூறிய அவர், சசிகலா காலில் விழுந்ததை போல முதல்வர் ராஜ்பவனுக்கு தவழ்ந்து போய் மண்டியிட்டாவது 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி வாங்கி கொடுங்கள் எனவும் தெரிவித்தார்.
கோவையில் போஸ்டர் ஓட்டியவர்கள் மீது நடவடிக்கை இல்லை எனில் அடுத்த முறை குனியமுத்தூர் காவல் நிலையம் முன்பாக போராட்டம் நடைபெறும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

போராட்டம் நடைபெறுவதற்கு முன் காவல்துறையினர் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து பேனரை அகற்றியதால் காவல் துறையினருக்கும் திமுக வினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்ப்பட்டது.

மேலும் படிக்க