June 6, 2020
தண்டோரா குழு
பெண் மருத்துவருக்கு தொல்லை கொடுத்தவரை தட்டி கேட்ட அண்ணனை அடித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செல்வபுரம் மார்டின் டெய்சன்
அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நாகராஜின் மகன் சூர்யகுமார். இவரது தங்கை நித்யா அக்குபஞ்சர் மருத்துவராக உள்ளார்.உக்கடம் ரோஸ் கார்டன் பகுதியை சேர்ந்த ஜாகீர் உசேன் மகன் நவ்பால் ரகுமான்(27). கடந்த சில தினங்களாக நித்யாவை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து தனது அண்ணன் சூர்யகுமாரிடம் நித்யா கூறியுள்ளார்.
நேற்று மாலை இது குறித்து நவ்பாலிடம் கேட்டபோது சூர்யகுமாரை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.மேலும் நித்தியாவை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து சூர்யகுமார் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து நவ்பால் ரகுமான் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணைக்கு பின் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.