• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மன்னிப்பு கேட்டார் ஆளுநர் பன்வாரி லால் புரோகித்

April 18, 2018 தண்டோரா குழு

பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டியதற்காக ஆளுநர் பன்வாரிலால் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பத்திரிகையாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ஆளுநர் பதிலளித்தார்.இதனையடுத்து பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்த நிலையில் ஆங்கில இதழின் பெண் நிரூபர் ஒருவர் ஆளுநரிடம் ஒரு கேள்வி கேட்டார்.அதற்கு பதிலளிக்காமல் நீங்கள் என் பேத்தி மாதிரி என்று கூறி பெண் நிருபரின் கன்னத்தில் லேசாக தட்டினார்.அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

பத்திரிக்கையாளர்கள் உட்பட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.மேலும்,ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.அதைபோல் கன்னத்தில் தட்டியது தொடர்பாக பெண் பத்திரிக்கையாளர் ஆளுநருக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.இந்நிலையில், பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டியதற்காக ஆளுநர் பன்வாரிலால் வருத்தம் தெரிவித்துள்ளார்.

40 ஆண்டுகளாக நான் பத்திரிகை துறையில் இருந்துள்ளேன். நல்ல கேள்வி கேட்டதற்காக, பேத்தி என நினைத்து தட்டிக்கொடுத்து பாராட்டினேன். அது உங்களை காயப்படுத்தி இருப்பது கண்டு வருந்துகிறேன். எனது மன்னிப்பை ஏற்க வேண்டுகிறேன். என நிருபர் லட்சுமி சுப்பிரமணியனுக்கு கடிதம் எழுதி ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் மன்னிப்புக் கோரியுள்ளார்.

மேலும் படிக்க