July 7, 2020
தண்டோரா குழு
கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே சில காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி காவல் நிலையம் மூடப்பட்டது.
கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 3 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் காவல் நிலையம் மூடப்பட்டது. இதையடுத்து,கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கப்பட்டு காவல் நிலையம் மீண்டும் செயல்பட துவங்கியது.
இந்நிலையில், போத்தனூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலருக்கு இன்று கொரானா தொற்று உறுதியானது.பெண் காவலர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனையடுத்து,போத்தனூர்
காவல் நிலையம் இரண்டாவது முறையாக மீீண்டும்மூடப்பட்டுள்ளது.தற்சமயம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் காவல் நிலையம் செயல்படும் என கூறப்படுகிறது.