• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண்ணின் உயிரை காப்பாற்றிய சிஆர்பிஏப் படை வீரர்கள்

September 5, 2017 தண்டோரா குழு

ராய்பூரில் சாலை ஓரத்தில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பெண்ணை சிஆர்பிஏப் படை வீரர்கள் ஸ்ட்ரெச்சரில் வைத்து, 7 கிலோமீட்டர் தூக்கி சென்று, காப்பாற்றியுள்ளனர்னர்.

சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள கேட்கல்யாண் காவல்நிலையத்திற்கு உட்பட்ட தண்டேவாடா பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாகும்.இப்பகுதியில் சிஆர்பிஏப் படை வீரர்கள் ரோந்து முடித்து தங்கள் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த இடத்தில் சாலை ஓரத்தில் சுமார் 40 வயது மிக்க பழங்குடி பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் படுத்திருப்பதை கண்டனர்.

உடனே, அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, தனது பெயர் கோசி என்றும், தனக்கு அதிக காய்ச்சல் இருப்பதாகவும் தன்னுடைய கணவர் மற்றும் உறவினர்கள் தன்னை அங்கேயே விட்டுவிட்டு சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். அந்த இடம் அடர்ந்த
காட்டு பகுதியாக இருப்பதால், ஹெலிகாப்ட்டர் வந்தாலும், அந்த இடத்தில் இறங்க முடியாது. அங்கிருந்த சாலைகள் மோசமாக இருப்பதால் ஆம்புலன்ஸ் சேவையும் அங்கு வர இயலாது.

இதனையடுத்து அங்கிருந்த மர குச்சிகளை பயன்படுத்தி, ஒரு ஸ்ட்ரெச்சரை சிஆர்பிஏப் படை வீரர்கள் உருவாக்கினர். கோசியை அதில் படுக்க வைத்து, அவருடைய குழந்தைகளை தங்கள் தோள்களில் தூக்கிகொண்டு, சுமார் 7 கிலோமீட்டர் நடந்து சென்று, கதம் என்னும் கிராமத்தை அடைந்தனர்.

அங்கிருந்து கோசி மற்றும் அவளுடைய குழந்தைகளை ஆம்புலன்ஸ் சேவை மூலம் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த மருத்துவமனையிலிருந்த மருத்துவர்கள் கோசிக்கு சிகிச்சை அளித்தனர்.

மேலும் படிக்க