October 10, 2017
தண்டோரா குழு
ஆணாக இருந்து தற்போது பெண்ணாக மாறிய கப்பல் மாலுமி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் மணீஷ் குமார் கிரி.இவர் கடந்த 2010-ம் ஆண்டு விசாகப்பட்டினம் ஐ.என்.எஸ். இக்ஸிலா கப்பற்படை தளத்தில் மாலுமியாக பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில் கடந்த வருடம் விடுமுறையில் சென்ற மணீஷ் கிரி, மீண்டும் பணியில் சேர்ந்த போது அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிய துவங்கியுள்ளது. இதனால் கப்பலில் பணி செய்யும் நிர்வாகிகளுக்கு சந்தேகம் ஏற்பட, மணீஷிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது மணீஷ் விடுமுறைக்காக மும்பை சென்ற போது அங்குள்ள ஒரு மருத்துமனையில், பெண்ணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டது தெரியவந்தது.இதனையடுத்து கப்பற்படை விதிமுறைகளை மீறியதாக உடனடியாக அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.