• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெட்ரோல் பங்க் ஊழியருக்கு அரிவாள் வெட்டு பணம் கொள்ளை – 3 பேர் கைது

December 27, 2018 தண்டோரா குழு

சிதம்பரம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை அரிவாளால் வெட்டி விட்டு, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்குக்கு நேற்றிரவு, 3 பேர் ஒரு பைக்கில் வந்துள்ளனர். பைக்கிற்கு பெட்ரோல் போட்ட பின்னர், 3 பேரும் பங்க் ஊழிய ர்சிவசங்கரனுடன் பேச்சு கொடுத்துள்ளனர். பின்னர் பைக்கில் அமர்ந்திருந்தவர்களில் ஒருவன் கீழே இறங்கி ஊழியர் சிவசங்கரனை சரமாரியாக வெட்டினான். அப்போது, மற்றொருவன் சிவசங்கரன் கையில் இருந்த பணப்பையை பறிக்க முயன்றான். பணப் பையை தரமறுத்ததால் ஆத்திரத்தில் கொடூரமாக கை, கால்களில் வெட்டினான். இந்நிலையில்,நிலைகுலைந்த சிவசங்கரன், அதேஇடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

இதனையடுத்து பணப்பையை எடுத்துக்கொண்டு மூன்று பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டுதப்பிச் சென்ற குற்றவாளிகளை பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

3 பேர் கைது

சாமியார்பேட்டை அருகே உள்ள பீச் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான போலீசார், 3 குற்றவாளிகளையும் பிடித்தனர். புதுச்சேரி கரிகாலன் குப்பத்தை சேர்ந்த அவர்களிடமிருந்து பெட்ரோல் பங்கில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில், நேற்று முன்தினம் 3 பேரும் சிதம்பரம் புறவழிச்சாலையிலும் ஒரு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அப்போது கொள்ளையடிக்கப்பட்ட செல்போன், பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்துமூன்றுபேரிடமும்விசாரணைநடைபெற்றுவருகிறது. பறிக்கப்பட்ட பணப்பையில் சுமார் 5 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் வரை பணம்இருந்ததாக தெரிகிறது. படுகாயமடைந்த சிவசங்கர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம் டி.எஸ்.பி. பாண்டியன்,

பெட்ரோல் பங்க்கில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளே, சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உதவியாக இருந்ததாகக் கூறினார்.

மேலும் படிக்க