May 3, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டுவரி உயர்த்தப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வருவாயை உயர்த்தும் வகையில் இந்த மதிப்புக்கூட்டு வரி உயர்த்தப்படுவதாக தெரிகிறது. இதனால் தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.3.25 காசும்,டீசல் விலை ரூ.2.50 காசும் உயர்கின்றன. நாளை முதல் இந்த விலை அமலுக்கு வரும் எனப்படுகிறது.ஊரடங்கு நேரத்தில் அரசின் வருவாயை அதிகரிக்கவும், கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்காக நிதியை அதிகரிக்கவும் இந்த வரி உயர்வு கொண்டு வரப்பட்டிருப்பதாக பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.