• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெட்ரோல், டீசல் விலையை அறிய புதிய ஆன்ட்ராய்டு ஆப்

June 12, 2017 தண்டோரா குழு

பெட்ரோல், டீசல் விலை குறித்து அறிந்துக்கொள்ள Fuel@IOCஎன்ற ஆன்ட்ராய்டு செயலியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலைகளை தினந்தோறும் நிர்ணயிக்கும் முறையை இந்தியாவில் முதல் கட்டமாக 5 நகரங்களில்எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மாதம் அறிவித்திருந்தது. இதையடுத்து வரும்16ம் தேதிமுதல் இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலைகளை தினந்தோறும் நிர்ணயிக்கும் இந்த நடைமுறையை அமல்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. தினமும் விலையை வாடிக்கையாளர் தெரிந்து கொள்வதற்கு வசதியாக எண்ணெய் நிறுவனங்கள் புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இதற்காக fuel@IOCஎன்ற ஆப் இந்தியன் ஆயில் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.ஒரு வேளை ஸ்மார்ட் போன் இல்லாத வாடிக்கையாளர்கள் குறுஞ்செய்தி வாயிலாகவும் விலையை தெரிந்து கொள்ளலாம்.

மேலும், வாடிக்கையாளர்கள் தங்களின் செல்போனில் RSP DEALERCODE என டைப் செய்து இந்த 9224992249 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் அன்றை விலை நிலவரம் உடனடியாக தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க