• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெட்ரோல் கிடைக்காமல் மக்கள் அவதிபட்டால் கடும் நடவடிக்கை

April 19, 2017 தண்டோரா குழு

ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை காரணமாக பெட்ரோல், டீசல் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெட்ரோல் விற்பனையாளர்களுக்கு பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தங்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை விடப்படும் அறிவித்தனர்.

அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற மே மாதம் 14-ம் தேதி முதல், ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை விடப்படும் என பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் விடப்படும் விடுமுறை காரணமாக பெட்ரோல், டீசல் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெட்ரோல் விற்பனையாளர்களுக்கு பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்,அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க