• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறை 2வது நாளாக விசாரணை

December 14, 2018 தண்டோரா குழு

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தமிழ்நாடு, பெங்களூர், ஐதராபாத், புதுச்சேரி என 187 இடங்களில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

எனினும், சோதனை பற்றிய விவரங்கள் வரவில்லை. இந்நிலையில், வருமான வரிசோதனை தொடர்பாக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடல் விசாரணை நடத்த சிறை நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து, பெங்களூர்பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிக்கலாவிடம் ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் ஒரு பெண் உள்பட 5 பேர் கொண்ட குழு நேற்று 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்

இந்நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் விசாரணையை தொடங்கினர்.

மேலும் படிக்க