• Download mobile app
11 May 2024, SaturdayEdition - 3013
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பூந்தொட்டியாக மாறிய கண்ணீர் புகை குண்டுகள்.

March 4, 2016 வெங்கி சதீஷ்

பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையேயான பிரச்சனை உலகறிந்த ஒன்று. இதில் பலவாறாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையின்றி இருந்ததாலேயே உலகளவில் எடுக்கப்பட்ட சமாதான முயற்ச்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

குறிப்பாக 2012, 13ம் ஆண்டுகளில் போராட்டம் உச்சத்தை அடைந்திருந்தது. ஒருவருக்கு ஒருவர் பொதுமக்களை பாதிக்கும் ஆயுதங்களை பயன்படுத்தினர். மேலும் பாலஸ்தீன குடியிருப்புகளை காலி செய்யும் நோக்கத்தோடு இஸ்ரேல் ராணுவம் ஆயிரக்கணக்கான கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியது.

இதையடுத்து அங்கிருந்த மக்கள் பலர் வெளியேறினர். ஆனாலும் இதை பொறுத்துக்கொண்டு ரமல்லாஹ் என்ற இடத்தை அடுத்த பிளின் கிராமத்தை சேர்ந்த கிராம வாசிகள் அவர்கள் பகுதியில் வீசப்பட்ட கண்ணீர் புகை குண்டுகளின் கூடுகளை மண்ணால் நிரப்பி அதில் பூச்செடிகளை நட்டு பராமரித்தனர்.

இதில் ஒரு மூதாட்டி தனக்கு சொந்தமான இடத்தில் சுமார் நூற்றுக்கணக்கான கூடுகளில் பூச்செடிகளை நட்டு வளர்த்து வந்தார். இது குறித்து அவர்கள் தெரிவித்தபோது, எங்கள் பகுதியில் ஆயிரக்கணக்கான கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. அவற்றின் மீதியான கூடுகள் மட்டும் தெருவில் பரவலாக காணப்பட்டது.

இதையடுத்து அதை சேர்த்து ஒரு பூந்தோட்டம் அமைக்க வேண்டும் என நினைத்து இந்த ஏற்பாட்டை செய்தோம் என தெரிவித்தனர். அந்த காட்சி பார்ப்பவர் மனதை கலங்க வைப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க