• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புல்வாமா விவகாரத்தில் இரு நாடுகளும் அதிக கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் – ஐ.நா.பொது செயலாளர்

February 20, 2019 தண்டோரா குழு

இந்தியா பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிக கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் ஐ.நா. பொது செயலாளர் ஆன்டோனியோ குட்ரெஸ் அறிவுறுத்தியுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதலால் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. இதனால் இந்தியா மக்கள் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் எங்களுக்கு சம்பந்தம் கிடையாது என மறுப்பு தெரிவிக்கிறது. இருப்பினும் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை தணிக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிக கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் ஐ.நா. பொது செயலாளர் ஆன்டோனியோ குட்ரெஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஐ.நா. பொது செயலரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறுகையில் ”

காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். இரு நாடுகளும் கேட்டுக்கொண்டால், தலையிட பொது செயலர் தயாராக உள்ளார்.புல்வாமாவில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, இரண்டு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது, மிகுந்த கவலை அளிக்கிறது. பாகிஸ்தான் தரப்பு, பொது செயலரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக மீடியாக்களில் தகவல் வந்துள்ளது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் எங்களுக்கு வரவில்லை.காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். மேலும் புல்வாமா தீவிரவதாக தாக்குதலில் உயிர் இழந்த வீரர்களின் குடும்பத்துக்கும், இந்திய மக்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் ” என இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க