• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புல்வாமா தாக்குதல் குறித்து விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் – பாகிஸ்தான்

February 16, 2019 தண்டோரா குழு

பயங்கரவாத தாக்குதல் குறித்த ஆதாரங்களை இந்தியா அளித்து விசாரணைக்கு ஆதரவு கேட்டால் நடவடிக்கை எடுக்கத் தயார் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதலில் குறைந்தது 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர். பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் இஸ்லாமாபாத் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பவாட் சவுத்ரி, எந்த தாக்குதலும் நடந்தாலும் உடனேயே இந்தியா பாகிஸ்தானை குற்றம்சாட்டுகிறது. அரசியல் காரணங்களுக்காக கூறப்படும் இந்த குற்றச்சாட்டில் எந்த அர்த்தமும் இல்லை. இரண்டு பக்கமும் உள்ள சில சக்திகள் இயல்பு நிலையை விரும்புவதில்லை என்றார்.

மேலும், காஷ்மீர் பிராந்தியத்தின் உள்நாட்டு போராட்டம் காரணமாக நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை குற்றம்சாட்ட கூடாது. ஜெய்ஷ் என்ற பெயரில் பல அமைப்புகள் உள்ளன. அதில் எந்த அமைப்பு என்பது குறித்த ஆதாரங்கள் இருந்து அவற்றை இந்தியா அளித்து விசாரணைக்கு ஆதரவு கேட்டால் பாகிஸ்தான் விசாரனைக்கு அளிக்க தயார் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க