• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புல்வாமா தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை – பாகிஸ்தான் மறுப்பு

February 15, 2019 தண்டோரா குழு

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் சிக்கி 44 இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைத்தனர். இந்த தற்கொலை படை
தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று 70 வாகனங்களில் 2,500 சிஆர்பிஎப் வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டுகாரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். இந்த கார் வீரர்கள் சென்ற கான்வாயில் புகுந்தது. காரை மோதியதும் அதில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. தொடர்ந்து பயங்கரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.பயங்கரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.

இத்தாக்குதலுக்கு இதற்கு ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இந்த தீவிரவாத தாக்குதலுக்கு நாடுமுழுவதில் இருந்தும் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் பாகிஸ்தானுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளன. மேலும், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

இந்த சூழலில் பாகிஸ்தான் வெளியுறவு அதிகாரி,

“புல்வாமா தாக்குதலுக்கும், பாகிஸ்தானும் எந்த தொடர்பும் இல்லை. உண்மையில் இந்த தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம். தீவிரவாத தாக்குதல் எங்கு நடந்தாலும் அதை பாகிஸ்தான் கண்டிக்கும், எதிர்க்கும்.” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க