• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புரூக்பீல்ட்ஸ் மாலில் முப்பரிமாண புதுமையான தந்திர கண்காட்சியகம் எனும் கிளிக் ஆர்ட் மியூசியம் !

December 22, 2022 தண்டோரா குழு

கோவை புரூக்பீல்ட்ஸ் மால் வரும் வாடிக்கையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தும் விதமாக முப்பரிமாண புதுமையான தந்திர கண்காட்சியகம் எனும் கிளிக் ஆர்ட் மியூசியம் துவங்கப்பட்டது.

இந்தியாவில் டிஜிட்டல் கலையில் சிறந்த கலைஞரும்,உலக அளவில் சிங்கப்பூர், மலேசியா,ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ஓவிய நிகழ்ச்சிகளை நடத்தி பிரபலமானவர் ஏ.பி.ஸ்ரீதர்..பத்மஸ்ரீ கமல்ஹாசன் துவங்கி சச்சின் டெண்டுல்கர், அமிதாப்பச்சன் என பிரபலங்களின் வீடுகளில் ஓவியங்களை அலங்கரித்துள்ள இவருடன் இணைந்து ,கோவையில் முதன் முறையாக புரூக் பீல்ட்ஸ் மால் நிர்வாகம் கிளிக் ஆர்ட் மியூசியத்தை துவக்கியுள்ளது.

புரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தின் நான்காவது தளத்தில் துவக்கியுள்ள இதற்கான துவக்க விழாவில் வணிக வளாகத்தின் தலைமை செயல் அதிகாரி அஸ்வின் சுப்ரமணியம் மற்றும் ஓவிய கலைஞர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த கிளிக் ஆர்ட் மியூசியத்தில், கலை நயமிக்க முப்பரிமாண ஓவியங்கள், புதுமையான படைப்பாக உருவாக்க பட்டுள்ளன.

இந்த ஓவியங்கள் ஒவ்வொரு இடத்திலிருந்தும் வேறு வேறு கோணங்களில் பார்க்கும்போதும் மற்றும் அதனை படமாக்கும் போதும் அதனை பார்ப்பவர்கள் மற்றும் படம் எடுப்பவர்களுக்கு பரவசம் ஊட்டும் நிகழ்வாக இருக்கும் எனவும், அருங்காட்சியகத்தில் நடக்கும் இடம் புகைப்படம் எடுக்கும் இடம் என இரு வேறு இடங்களில் நின்று அழகான படங்களை எடுத்துக் கொள்ளும் வகையில் ஓவியங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஓவிய கலைஞர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

மேலும் படிக்க