‘புத்த பூர்ணிமா’ கொண்டாட உள்ள மக்களுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர், துணைக்
குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் மே 1௦-ம் தேதி, புத்தர் பிறந்த நாளை ‘புத்த பூர்ணிமா’ என்று உலகமெங்கும் மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
“இந்த நாள் புத்தருடைய பிறந்தநாளை மட்டும் நினைவு கூறுவதில்லை. மாறாக அவர் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதையும் நினைவுகூறும் நாளும் இது.” என புத்த மத துறவிகள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தலைவர்களின் வாழ்த்து;
இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டிருக்கும் தனது வாழ்த்து செய்தியில்,
“உயர்ந்த கருத்து மற்றும் மனிதக்குலத்தின் மீது கவலை கொண்டவர் கௌதம புத்தர். இரக்கம், அஹிம்சை, சமத்துவம், ஆகியவை ஆன்மீக வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்று அவர் அழகாகவும் தெளிவாகவும் தனது செய்திகளில் கூறியுள்ளார். அவர் கற்றுத்தந்த அன்பு, இரக்கம், மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவை தற்போது அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்தார்.
துணைக் குடியரசுத்தலைவர் ஹமீத் அன்சாரி வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,
“ புத்தர் காட்டிய இரக்கம் மற்றும் சகிப்புத்தன்மை பாதையை மக்கள் பின்பற்ற வேண்டும். அமைதி, மற்றும் இரக்கத்தின் நித்திய செய்தி, மனித துன்பங்களையும் துயரங்களையும் அகற்றி மக்களை வழி நடத்துகிறது” என்று தெரிவித்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில்,
“மக்களுக்கு எனது புத்த பூர்ணிமா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று மக்கள் கௌதம புத்தரின் கொள்கைகளை நினைவுகூறுகின்றனர். அவரது உன்னத எண்ணங்கள் அனைத்து தலைமுறையினருக்கும் தொடர்ந்து வழிக்காட்டும். இணக்கமான கருணையுள்ள சமுதாயத்தை உருவாக்க கௌதம புத்தர் மக்களுக்கு உதவி புரிவாராக” என்று பதிவிட்டிருந்தார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்