• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் – சென்னை காவல்துறை

December 31, 2018 தண்டோரா குழு

புத்தாண்டு கொண்டாடத்தின் போது குடித்துவிட்டு மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை காவல் துறை வெளியிட்ட செய்திகுறிப்பில்,

புத்தாண்டு தினத்தின்போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வதுடன் குற்றம் செய்தவரின் தகவல்கள் குற்ற ஆவணக்காப்பகத்தில் பதிவு செய்யப்படும். பாஸ்போர்ட், விசா சரிபார்ப்பின் போது தடையில்லா சான்று பெறுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கடற்கரையோரங்களில் குதிரைப்படைகள் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் கிண்டி. அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம் பகுதிகளில் பைக் ரேஸ் தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மெரினா, சாந்தோம் , எலியட்ஸ், நீலாங்கரை கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டத்தை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனங்களில் ரோந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேனி, தி.நகர், அடையாறு உள்ளிட்ட 368 இடங்களில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாளை இரவு 9 மணி முதல் முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 100 முக்கிய கோயில்கள், தேவாலயங்கள்,
வழிபாட்டுத்தலங்களில் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றத்தடுப்பு நடவடிக்கை, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.மெரினா, சாந்தோம், காமராஜர் சாலைகளில் போலீஸ் உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்படுள்ளது.

மேலும் படிக்க